போலீஸ் ஐ.ஜி. பிரமோத் குமார் கோவை கோர்ட்டில் ஆஜர் – விசரணை 4ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..!

கோவை : திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்து 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் இங்கு முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து 571 பேரிடம் ரூ.930 கோடி மோசடி செய்தது .இது தொடர்பாக இந்த நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவை டான் பிட்கோர்ட்டு இவர்களுக்கு 27 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கிடையில் இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார் கமலவள்ளியை கடத்திச் சென்று மிரட்டி ரூ 3 கோடி பணம் பறித்ததாக அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது தற்போது கரூர் காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஐ.ஜி. பிரமோத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததுடன் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே ஐ.ஜி பிரமோத்குமாருக்கு கோர்ட் பிடிவாண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அது போன்று மற்ற 4 பேரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் விசாரணையை  வருகிற 4 -ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில் ஐ.ஜி. பிரமோத்குமார் இந்த கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் சம்பந்தமும் கிடையாது .எனவே இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த மனு மீது வருகிற 31 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.