கோவையில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது – ரூ.1 லட்சம் பறிமுதல்..!

கோவை கவுண்டம்பாளையம் அடுத்து உள்ள நல்லாம்பாளையத்தில் நிதி நிறுவன அலுவலகத்தில் கேரளா லாட்டரிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் சுப்பிரமணியம்பாளையம் மருதம் நகரை சேர்ந்த 32 வயதான சஜித், தொப்பம்பட்டி பூங்கா நகரை சேர்ந்த 31 வயதான விக்னேஷ் ஆகிய 2 பேரும் நிதி நிறுவனம் நடத்தி வருவதும் மறைமுகமாக ஆன்லைன் மூலம் போலி கேரளா லாட்டரிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் உதவியாக சின்னவேடம்பட்டி வசந்தம் நகரை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் பணம் ரொக்கம், செல்போன்கள், கார்கள் ஆகியவற்றில் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.