உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீஸ்!

ஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் , முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன்படி, தஞ்சாவூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தஞ்சாவூர் போலீசார் மற்றும் சென்னை காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் திடீரென சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்திருந்தனர். இதை அறிந்த திமுகவினர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். அப்போது, காவல் இணை ஆணையர் விஜயகுமார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மனைவி மற்றும் திமுக வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உதயநிதி வீட்டிற்கு விரைந்து சென்று காவல் இணைய ஆணையர் விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அத்துடன், திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.