இனி எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு… Gpay, PhonePe-க்கு வந்த புதிய சோதனை… ஒரு நாளைக்கு 10 முறை மட்டுமே பணம் அனுப்ப முடியும்..!!

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே (Gpay), ஃபோன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, ஜி பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது புதிய விதிமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இனிவரும் நாட்களில் ஒரு நாளில் 10 முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும். கூடுதலாக பரிமாற்றம் செய்ய நினைத்தால் கூட செய்ய இயலாது. இந்த 10 முறை என்பதும் வங்கிகள் மூலம் செலுத்தும் யுபிஐ முறையை பயன்படுத்துவதால் மட்டுமே சாத்தியம். ஜி பே, போன் பே போன்ற செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்ய நினைத்தால் ஒரு நாளைக்கு 10 முறை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். அதிகப்படியான ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யப்படுவதால் அதிகளவில் மோசடி புகார்கள் ஏற்படுகிறது. அதனை தடுக்கவே இவ்வாறான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.