போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி..!

தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி மொழியை படித்தார். அப்போது அவர் கூறியதாவது:-போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேறருக்க அரசுக்கு துணை நிற்பேன் .மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.இவ்வாறு கூறினார்.இதை காவல்துறை அமைச்சுப் பணியாளர்களும் காவலர்களும் போலீஸ் அதிகாரிகளும் திரும்ப கூறினார்கள்.இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சுகாசினி கலந்து கொண்டார்.

இதே போல கோவை ராமநாதபுரத்தில் உள்ள ” டிரினிட்டி” மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.இதில் ராமநாதபுரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி. பள்ளிக்கூட முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாணவர்கள் பங்கேற்றனர்..