சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி தலை குப்புற விழுந்து விபத்து-மீட்பு குழு விரைவு.!!

சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம்  மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.

குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம் குவாங்சிக்கு மேலே ‘விபத்து’ ஏற்பட்டதாக சீன அரசு தொலைக்காட்சி கூறுகிறது. சம்பவத்தின் போது சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 133 பயணிகள் இருந்ததாகவும், அதில் பயணித்த நபர்களின் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது, மீட்பு பணிக்குழு மலைப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

Hypersonic Missile: உன்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்திய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் – சிறப்புகள் என்ன?

குவாங்சி அவசரகால மேலாண்மைத் துறை ஒரு அறிக்கையில் கூறியது: ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் இருந்து 133 பேருடன் சென்ற போயிங் 737 பயணிகள் விமானம் குவாங்சியில் உள்ள வுஜோவ், டெங் கவுண்டியில் விபத்துக்குள்ளானது மற்றும் மலைத் தீ ஏற்பட்டது.