கள் இறக்கும் போது மின்சாரம் தாக்கி பெயிண்டர் மர்ம சாவு – 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மாவட்டம் அன்னூர் ஆலம்பாளையம் பக்கம் உள்ள ருத்ரியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் .இவரது மகன் சுஜித் (வயது 22) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது.குடிப்பழக்கம் உடையவர்.இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கஞ்சம்பள்ளி சென்னியப்பன் தோட்டத்து அருகே சுஜித் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது,இதுகுறித்து அவரது மனைவி மகேஷ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்டது.ஆனால் அருகில் மின் கம்பங்கள் ஒயர்கள் எதுவும் இல்லை.இந்த நிலையில் இவரது சாவில் மர்மம் இருப்பதாக இவரது மனைவி மகேஷ் புகார் செய்திருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் கஞ்சப்பள்ளி பனைமரத்து தோட்டத்தைச் சேர்ந்த துரை ( வயது 59) அவரது தோட்டத்தில் சட்ட விரோதமாக கள் இறக்கி வந்தாராம்.இதை அறிந்த பக்கத்து கிராமத்து மக்கள் அந்த தோட்டத்துக்குள் புகுந்து கள் திருட முயன்றார்கள். இதை தடுக்க கஞ்சபள்ளிதுரை ( வயது 59) ஊத்துப்பாளையத்தைச் சேர்ந்த நெல்லிக்குஞ்சான் என்ற ரங்கசாமி (வயது 45)ருத்ரியம் பாளையம் குணசேகரன் ( வயது 49) கஞ்சப்பள்ளி பழனிச்சாமி ( வயது 57) தாச பாளையம் வெங்கட் ( வயது 50) கஞ்சப்பள்ளி முத்துக்குமார் (வயது 50) ஆகியோர்அந்த தோட்டத்திற்கு மின் வேலி அமைத்தனர். சுஜித் கடந்த 21 ஆம் தேதி இரவு அந்த தோட்டத்துக்குள் புகுந்து மரத்தில் ஏறி கள் இறக்கச் சென்ற போது மின்வேலியில் பாய்ச்சிய மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்தார்.பின்னர் அவரது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி 500 மீட்டர் தூரத்தில் கொண்டு போய் போட்டு விட்டனர்.போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பெயரில் துரை, நெல்லிக்குஞ்சன், குணசேகரன் பழனிச்சாமி வெங்கட், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.