கோவை :கடலூர் மாவட்டத்திலிருந்து ஆயுதப்படை போலீசார் 31 பேர் போலீஸ் வாகனத்தில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பைபாஸ் ரோட்டில் போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போதும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி,எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென்று நின்றது. இதனால் போலீஸ் வாகனம் லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தை ஓட்டிச் சென்ற போலீஸ்காரர் முருகன் உட்பட 31 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது .இவர்கள் அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 16 போலீசார் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து அவினாசி போலீசார் லாரி டிரைவர் தாதா பீர் (வயது 40 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.