15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை: மழை காலத்தில் சாகச பயணம்
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பி ஆர் எஸ் கவலர் குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை. மழை காலத்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் காவலர் குடும்பங்கள் . காவலர் முதல் உதவி ஆணையர் வரை சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பணிக்கு வாகனத்தில் செல்பவர்கள் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக இருந்த பாதையில் கடந்தாண்டு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பாக மண் போட்டு சமதளப்படுத்தினர். மழை காலத்தில் உழுது பயிரிட்ட நிலம் போல மாறிவிடுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். காவலர் குடியிருப்புதானே என மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருக்கிறது. சாலை அமைத்து தருவதாக இங்கு ஓட்டு வாங்கியவர்களும் கண்டுகொள்ளவதில்லை என இங்கு வசிக்கும் இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காவலர் வீட்டு வசதி வாரியமும் கண்டும் காணாமல் மெளனமாகவே இருக்கிறது. தினம், தினம் வாகன விபத்தில் அடிபடும் நிலை மாறுமா என்ற கேள்விக்குறியோடு , சேறும் சகதியுமான சாலையை கடந்து செல்கின்றனர்
Leave a Reply