கோவை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு-கலெக்டர் சமீரன் பங்கேற்பு..!!

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உடல் உறுப்பு தானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யங் இந்தியா, சிஐஐ ஆகியவை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சாளர் கவிதா ஜவகர் பங்கேற்று அறம் செய விரும்பு என்ற தலைப்பில் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்
தொடர்ந்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உடல் உறுப்பு தானத்தின் அவசியம், நன்மைகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் மேலும், உடல் உறுப்பு தானம் குறித்து குடும்பத்தினர், உறவினர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.