அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ள ஆவணங்களை கைப்பற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்-வாகனத்தில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ..!

அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன் தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கூட்டத்திற்கு வருகை தரவில்லை. தற்போது ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.