சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே மேடை ஏறிய எடப்பாடி பழனிசாமி..!!!

அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மேடை ஏறினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் நடைபெற்று வருகிறது. 9.15 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில் பொதுக்கழு நடத்த நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதுவரை மேடை ஏறாமல் இருந்து ஈபிஎஸ் உத்தரவு வந்த பிறகு மேடை ஏறினார்.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் செல்லும் போது அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

ஆத்திரம் அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவை உடைத்தனர். கதவை அடித்து உடைத்த ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரஸ்பரமாக கற்களை வீசித்தாக்க்கிக் கொண்டனர்.

மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். கற்கள் தாக்குதலில் சிலருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டுள்ளது.