பிரதமர் மோடி சொன்னதை கேட்காத ஓபிஎஸ், இபிஎஸ்… சொன்னதை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் பாஜக..!!

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாஎன்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு புகைப்படத்தில் தேசிய கொடியை மோடி பதிவிட்டிருந்தார்.

மத்திய பாஜக அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் தேசிய கொடியை பதிவிட்டனர். இதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழக பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலரும் தங்களது சமூக ஊடக முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது முகப்பு படத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடியேற்றுவது போன்ற படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தங்களது சமூக வலை தளத்தில் முகப்பு படத்தை மாற்றவில்லை . ஏற்கனவே இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படமும் தங்களது படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது முகப்பு படத்தில் தேசிய கொடியை மாற்றி உள்ளார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினி சந்தித்து பேசினார். அப்போது அரசியல் தொடர்பாக பேசியதாகவும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசியது குறித்து வெளியில் கூற இயலாது எனவும் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஆளுநர் அலுவலகம் அரசியல் அலுவலக மாற்றப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு கட்சியின குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் முகப்பு தளத்தில் தேசிய கொடியை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.