எங்கள் தலைமையில் தான் கூட்டணி.. இபிஎஸ் தான் முடிவு எடுப்பார்.. தேர்தலுக்கு தயாராகும் அதிமுக- செல்லூர் ராஜீ பேட்டி..!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை.

இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,

மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு உருவாக்கப்பட்டு, அந்தந்த திட்டங்களை மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், இங்கே இருக்கின்ற தலைவர் செந்தில்குமார் இவர்கள் தலைமையில் நாங்கள் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் வந்திருக்கிறோம். இங்கே பல கவுன்சிலர்கள், பிரசிடெண்ட் எல்லாம் வந்திருக்கிறார்கள்.

இது இங்கே மட்டும் மக்கள் கொதிக்கவில்லை, எல்லா ஊர்களிலும் மக்கள் வந்து கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த தமிழக அரசின் மீது. விலைவாசி நிர்ணயம் செய்கின்ற அளவிற்கு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. என மிகவும் கோபதாபத்தில் இருக்கிறார்கள். அதனால் எங்களுடைய வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த 10 ஆண்டுகளில் ரேஷன் கடைக்கு சென்றால் எல்லா பொருளும் கிடைத்தது எங்கள் ஆட்சியில். இன்றைக்கு போனால் கிடைக்குதா? கிடைக்கவில்லை. எல்லா இடங்களிலும் மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் எல்லா வகையிலும். . எனவே இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தலைமை ஏற்கும். நாடாளுமன்றத்தில் வருகின்ற கூட்டணியில், தலைமை ஏற்கின்ற கட்சிகள் யார் வந்தாலும் அந்த நேரத்தில் எங்களுடைய பொதுச் செயலாளரை பார்த்து பேசி முடிவு செய்வார் என தெரிவித்தார்.