எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பித்த நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இதன் மீதான விவாதம் நடைபெறும் தேதி இன்னும் மக்களவையில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இதே மணிப்பூர் விவகாரம் தான் எதிரொலித்தது.

இதன் காரணமாக இன்றும் இரு அவைகளிலும் தொடர் அமளி ஏற்பட்டு மக்களவை பிற்பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்படுகிறது என அவை தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஐன்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.