சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச் சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது.
பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும்.
இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது.
செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது.
மூலிகைகள் சந்தையில் விற்கப்பட்டு அதில் கிடைக்கும் லாபம் சிறைவாசிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.
சிறைத்துறை இயக்குநர் Tr . அமரேஷ் பூஜாரி, IPS நேற்று இந்நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்து இதனை பராமரிக்கும் சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார்.
DIG Tr முருகேசன், கண்காணிப்பாளர் Tmt நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply