கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி.இவரது மனைவி நாகலட்சுமி ( வயது 34) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக நாகலட்சுமி கடந்த சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களே ஆன் பெண் குழந்தை உள்ளது .கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் சாணி பவுடரை கரைத்து குடித்துவிட்டு , தனது குழந்தைக்கும் கொடுத்துள்ளார். இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply