அடடே! அப்படியா… மின்னணு வர்த்தகம்: உலகளவில் 2-வது இடத்தை பிடித்த இந்தியா..!

மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது.

இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள், இந்த வணிகத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த நாடுகள் பட்டியலில், 2-வது இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது.

இதனிடையில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இந்த நாடு 3.93 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து இருக்கிறது. அதன்பின் இந்தியா 1.69 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன், 3-வது இடத்தில் சீனாவும், 54 ஆயிரம் கோடி ரூபாயுடன் பிரிட்டன் 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் அதிகமான முதலீட்டை ஈர்த்ததில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவிலான துணிகர முதலீடுகளை பொறுத்தவரையிலும் கடந்த வருடத்தில் மின்னணுவர்த்தக தளங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு இருமடங்கு அதிகரித்துள்ளது.