இருகூரில் ஐ.டி .ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை -மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு ..!

கோவை அருகே உள்ள இருகூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் அருள்குமார் (வயது 32) சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் அருள்குமார் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.