உலக புத்தக தினத்தை முன்னிட்டு புழல்‌, மத்திய சிறையில்‌ புத்தக கண்காட்சித்‌ திருவிழா-வீடியோ இணைப்பு.!!

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று புழல் மத்திய சிறை -1 (தண்டனை ) கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தக கண்காட்சி திருவிழாவை திறந்து வைத்து சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசியதாவது நேரு, காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். நீங்கள் தலைவர்களாகி சிறைக்கு வெளியே செல்லுங்கள் என்று கூறினார்..

“நிறைய புத்தகம் வாசிப்பவர்கள் அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள்”.

‘தமிழ் சிந்தனையை உங்கள் முன் விதைத்துள்ளேன் . நீங்கள் மரமாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன்’..

எத்தனை மேடைகளை கண்டிருந்தாலும் சிறைவாசிகள் மத்தியில் பேசியதில் மிகவும் மன மகிழ்ச்சியை தருகிறது என கூறினார்.

இவ்விழாவில் அமரேஷ் பூசாரி தலைமை இயக்குனர் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, சிறைத்துறை துணைத்தலைவர் ( தலைமையிடம் )ஆர்.கனகராஜ் , சென்னை சரக சிறைத்துறை துணை தலைவர் ஏ.முருகேசன், புழல் மத்திய சிறை -1 (தண்டனை ), சிறைக் கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன், புழல் மத்திய சிறை-2 (விசாரணை ), சிறை கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்..