வால்பாறையில் கரடி தாக்கியதில் அதிகாரி காயம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான பன்னிமேடு எஸ்டேட் 1 வது டிவிஷனில் குடியிருந்து மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் புஷ்பராஜ் வயது 54 த/பெ. மார்க் இவர் வழக்கம் போல இன்று அங்குள்ள 22 ஆம் நம்பர் தேயிலைக்காட்டில் தேயிலைபறிக்கும் தொழிலாளர்களை கண்காணித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த கரடி அவரை தாக்கியது. இதில் வலது காலில் பல் பதிந்து எழும்பு முறிவு மற்றும் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது சம்பவம் அறிந்த சக தொழிலாளர்கள் உதவியோடு தோட்ட மருத்துவமனையான உருளிக்கல் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆலோசனைக்கு இணங்க கரடி நடமாடிய பகுதியில் மானாம்பள்ளி வனச்சரக தனிப்பணி வனவர் முத்துமாணிக்கம் தலைமையில் மனித வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினரை அப்பகுதியில் பணியமர்த்தி கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..