கோவையில் NIA 15 இடங்களில் சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி- ISIS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை- கோவையில் 15 இடங்களில் NIA சோதனை.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களிடம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இன்று தமிழ்நாடு கேரளா கர்நாடகா உட்பட 60 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ISIS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு, குனியமுத்தூர், பிருந்தாவன் நகர் உட்பட 15 இடங்களில் சோதனை NIA சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply