திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர் ராயப்ப கவுண்டர் .இவரது மனைவி தெய்வத்தாள் (வயது 60)இவர் நேற்று பைக்கில் தனது மகன் சக்திவேலுடன் கருமத்தம்பட்டி- செல்லப்பம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தெய்வத்தாளும்,மகன் சக்திவேலும் படுகாயம் அடைந்தனர் . அவர்களை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் தெய்வத்தாள் இறந்தார். சக்திவேல் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சக்திவேல் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றொரு பைக் ஒட்டி வந்த நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply