கோவையில் லாரி மோதி வடமாநில வாலிபர் பரிதாப பலி..!

கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லோபின்டி இராபாபு (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் அம்மன் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென எதிர்பாராத விதமாக லோபின்டி இராபாபு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.