சிப் பற்றாக்குறையால் ஒரு வாகனம் கூட தயாரிக்கவில்லை: ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தகவல்.!!

சிப் பற்றாக்குறையால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட தயாரிக்கவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டந்த சில மாதங்களாகவே இருந்த சிப் பற்றாக்குறை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் காலம் 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. தவிர சில டீலர்களிடம் வாகனங்களே இல்லை என்னும் நிலைதான் இருக்கிறது.

வேகமாக செயல்படும் ரயிலை அதிரடியாக பிரேக் போட்டு நிறுத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது எலெக்ட்ரிக் வாகனங்களின் நிலை என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சொஹிந்தர் கில் தெரிவித்திருக்கிறார்.

“எங்களுடைய விற்பனை ஒவ்வொரு மாதமும் இரு மடங்காக உயர்ந்துகொண்டே இருந்தது. சிப் பற்றாக்குறையை எப்படியோ சமாளித்துவந்தோம். ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் இந்த சூழலை மோசமாக்கிவிட்டது. அதனால் சிப்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

மற்ற இடங்களில் இருந்து சிப்களை கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் எங்களுடைய உற்பத்தி தொடங்கும்.

இந்த காலத்தை எங்களுடைய உற்பத்தி திறனை பெருக்குவதற்கும், சோதனைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறோம்” என கில் தெரிவித்திருக்கிறார்.