கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற வட மாநில வாலிபர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர்- போளுவாம்பட்டி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பைசூல் இஸ்லாம் (வயது 21) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும்.இவைகளை அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது .