மின்வாரிய ஊழியர் மீது இரும்பு கம்பியால் தாக்கிய போதை ஆசாமிகள்..!

கோவை நீலிகோணாம்பாளையம் தச்சன் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசன்(30). மின்வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் தச்சன் தோட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 2 பேர் அன்பரசனை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதும் குறித்தும், தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.