பஸ் வசதியே இல்லாத கிராமங்களுக்கு “பேருந்து சேவை”… அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.