மதுரை ஆசிரியையின் மூலிகைப் பூங்கா… மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு.!!

துரையில் வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்துவரும் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். ஆசிரியை சுபஸ்ரீ மதுரை வரிச்சியூர் அருகே மூலிகைப் பூங்காவை உருவாக்கி பரமாரித்து வருகிறார். அவருடைய மூலிகைப் பூங்காவைப் பார்வையிட நாள்தோறும் பார்வையாளர்கள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஆசிரியை சுபஶ்ரீயின் மூலிகைப் பூங்காவைக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டிப் பேசினார்.

பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது: ‘நமதருகே இருப்போர் சிலர், பேரிடர்க்காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ. இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர். இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது.’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ஆசிரியை சுபஸ்ரீயின் இந்த ஈடுபாடு, 1980-களில் தொடங்கியது; ஒரு முறை இவருடைய தந்தையாரை நச்சுப்பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள் – தாவரங்களைக் கோண்டு உடல்நலம் மீட்சி பெறுவதில் உதவிகரமாக இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் இவர். இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500-க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன.’ என்று ஆசிரியை சுபஸ்ரீயின் மூலிகைப் பூங்க குறித்துப் பேசினார்.

மேலும், ‘ ஆசிரியை சுபஸ்ரீ தனது இந்தப் பூங்காவைத் உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி இவர் தொலைதூரங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், தகவல்களைத் திரட்டி இருக்கிறார், பலமுறை மற்றவர்களிடம் உதவிகளையும் கோரியிருக்கிறார். கோவிட் காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்.
இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண தொலைவான பகுதிகளிலிருந்தும் பலர் வருகிறார்கள். இவர் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார். சுபஸ்ரீ அவர்கள், பலநூறு ஆண்டுகள் நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது, அவருக்கு நம்முடைய பலப்பல நல்வாழ்த்துள்’ என பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியை சுபஸ்ரீயை பாராட்டியுள்ளார்.