ஆவடியில் 6000 பேர் கலந்து கொண்ட இரவு மாராத்தான்… சென்னை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்..!

ஆவடி, அக், 4, ஆவடியில் 6000 பேர் கலந்து கொண்ட இரவு மாராத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவுப்படி போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவடி காவல் ஆணையரகம், சென்னை காவல் ஆணையரகம் , விளையாட்டு மேம்பாட்டு துறை, தனியார் கல்லூரிகள் இணைந்து ஆவடியில் இரவு மாராத்தான் ஓட்டத்தை நடத்தினர்.

இரவு 7.30 மணிக்கு மாராத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.மாராத்தான் ஓட்டத்திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சென்னை காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் அசரா கார்க் , சுதாகர், இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார், ஆவடி காவல் துணை ஆணையர் பாஸ்கரன், செங்குன்றம் காவல் துணை ஆணையர் மனோகரன், மற்றும் துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி, ஸ்ரேயா குப்தா, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரவு மாராத்தான் ஓட்டம் ஆவடி வேல் டெக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு மீஞ்சூர் வண்டலூர் 400 அடி சாலையில் நெமிலிச்சேரி டோல்கேட் வரை சென்று, மீண்டும் ஆவடி வேல் டெக் கல்லூரிக்கு திரும்பியது.

இதில் 5 கி.மீ.தூரம் மாராத்தான் ஓட்டம், 10 கி.மீ.தூரம் மாராத்தான் ஓட்டம், 25 கி.மீ.தூரம் மாராத்தான் ஓட்டம் என்று 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது.இந்த ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், உள்ளிட்ட 6000 பேர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாராத்தான் ஓட்டத்தில் முதல்இடம்  பெற்றவர் மற்றும் 2 ஆம், 3 ஆம் இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது..