4 கூட்டுறவு வங்கிகளுக்கும் பண எடுக்க புதிய கட்டுப்பாடு-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த 4 வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

அதேபோல் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50,000 பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்து கொள்ளலாம். மேலும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில், ஒரு வாடிக்கையாளருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன்படி ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகள் 6 மாதங்களுக்கு தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.