மனைவியை உடலுறவுக்கு அழைத்ததை தட்டிக் கேட்க சென்ற கணவரை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர் கைது..!!

மனைவியை உடலுறவுக்கு அழைத்ததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்.பக்கத்து வீட்டுக்காரர் கைது.

கோவை :  கோவை மதுக்கரை பக்கமுள்ள நாச்சிபாளையம் ,தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 32 )இவர் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா( வயது 29) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சதீஷ்குமார் (வயது 47)நேற்று நிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து அவரை உடலுறவுக்கு அழைத்தாராம் .இதுபற்றி நிஷா தனது கணவருக்கு தெரிவித்தார்.கணவர் அங்கு வந்து தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார்,அவரது மகன் பிரவீன்குமார் இருவரும் சேர்ந்து பிரபாகரனை தாக்கினார்கள். இதை அவரது மனைவி நிஷா தடுத்தார். அவரையும் கீழே பிடித்து தள்ளினார்கள்.இதில் இருவருக்கும்
காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நிஷா மதுக்கரை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகன் பிரவீன்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள் .இவர்களில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வருகிறார். பிரவீன்குமார் ஒத்தகால் மண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.