நீலமலை முன்னாள் இராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ரமேஷ் கிருஷ்ணன் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி.!!

நீலகிரி மாவட்டம் உதகை கப்பத்தொரை பகுதியில் வசித்து வரும் தாயார் சுபலட்சுமி எனது மகன் ராமகிருஷ்ணன் கிளேசியர் கிராசிங் பனிமலை தூத் என்ற பகுதியில் ஆப்ரேஷன் போர் பகுதியில் ஈடுபட்டபோது 2001 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி போரில் வீர மரணம் அடைந்தார், அன்று முதல் இன்று வரை கப்புத்துறை கிராமத்தில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் ராமகிருஷ்ணன் அவர்களின நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குன்னூர் எம் ஆர் சி ராணுவ மையம் , நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம், கிராம மக்கள் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், ராணுவ வீரர் ராமகிருஷ்ணன் அவர்களின் தாயார் தந்தை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கம் அஞ்சலி நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வந்திருந்தனர் ஆனால் கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக தனது கணவனை இழந்த சுபலட்சுமி தாயார் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை செயல்படுத்த முடியாமல் தவித்த சூழ்நிலையில் நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் தாமாக முன்வந்து தற்போது விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது,மாவட்ட செயலாளர் ஜே பி எஸ் சரவணன் பொருளாளர் கேவி ராமச்சந்திரன், கௌரவத் தலைவர் எஸ் நாதன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஏ டி எஸ் பி சௌந்தரராஜன், டி எஸ் பி, விஜயலட்சுமி, மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ஒன்பதாவது பிரிவு ராணுவ கமெண்டிங் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ராணுவ இசையுடன் மௌன அஞ்சலி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது,
அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் மண்சரிவில் சிக்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தின் நினைவாக அவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ராணுவ இசையுடன் மரியாதை செலுத்தப்பட்டது.
அனைத்து ராணுவ வீரர்கள் அதிகாரிகளும் நீலகிரி மாவட்ட அரசுத்துறை அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்,
தொடர்ந்து நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர், உடன் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர், அனைவருக்கும் நீலமலை முன்னாள் இராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில் வாழ்த்துக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நீலமலை முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர்.B.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் J.P.S.சரவணன், பொருளாளர் K.B.ராமசந்திரன், கௌரவ தலைவர் நாதன் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர், இந்த முகாமில் கூடலூர், பந்தலூர், குன்னூர்,மஞ்சூர், கோவை பகுதிகளில் இருந்து முன்னாள் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு முகாமில் பயனடைந்தனர் நன்றி உரையுடன் விழா நிறைவு பெற்றது