வால்பாறை – கருமலை இறைச்சல் பாறை முனீஸ்வரன் கோவில் திருவிழா..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது . இந்த ஆலய வளாகத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் உச்சிகால பூஜையுடன் கிடா வெட்டி பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பாக நடைபெற்ற இவ்விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் பலர் செய்திருந்த நிலையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..