தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் முகாம்..!!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.அவரது வீட்டில் நடந்த சோதனையில் 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 5பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ,ஏ) உயர் அதிகாரிகள் இன்று கோவை வந்தனர்.இவர்கள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்..கோவையில் கார் வெடித்து சிதறிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாறுகிறது.
தேசிய புலனாய்வு முகமையின் டி ஐ ஜி மற்றும் எஸ்.பி மற்றும் அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்குவார்கள்.இன்று சில இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது .