பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல்

பாட்னா – எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிளான போதை ஆயில் பறிமுதல்

பட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரயில் திருப்பூர் – கோவை இடையே வந்த போது ரயில்வே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது எஸ் – 10 பெட்டியில் 71 ஆவது இருக்கையின் அடியே மர்ம கவர்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்த போது அதில் 2.2 கிலோ ஹேசிஸ் ஆயில் என்ற போதைக்கு பயன்படுத்தும் ஆயில் இருந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போதை ஆயிலை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.