நான் கடவுள் திரைப்பட பாணியில் ஆதரவற்றவர்களை கடத்தும் கும்பல்: பொதுமக்கள் குவிந்ததால் கோவையில் பரபரப்பு – போலீசார் விசாரணை
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிருஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர். இது தொடர்பாக சுற்றுவட்டார பகுதியில் நேற்றும் முன் தினமும் சிலர் காணமால் போயிருப்பதாக சிலருக்கு தகவல் பரவியிது. இன்று காலை அட்டுக்கல் வனப்பகுதி அடிவாரத்தில் சிலர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ,
காப்பற்றுங்க என்று இரவு முழுவதும் கூச்சம் அழுகை சத்தம்
கேட்பதாக அருகில் உள்ள பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியது. அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு சில பொதுமக்கள் வந்து பார்த்த பொழுது அனைவரும் மொட்டை அடித்து 10, 16 அறையில் 50 க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜூபீன் அன்பின் ஜோதி ஆசிரமம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆதரவற்ற முதியோர்களை மீட்டு உரிய ஆசிரமத்தில் கொண்டு சென்று விடும் பணி கடந்த 17 வருடங்களாக செய்து வருவதாக கூறினார். இது தமிழ் நாடு முழுவதும் நடத்தி தற்போது கோவையில் கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோசிலின் துவக்கி வைத்ததாகவும், இந்த மீட்டு முகாமில் 230, 250 இங்கு அட்டுக்கல் பகுதியில் வைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நேற்று இரவு 30 நபர்களை வாகனம் மூலம் அனுப்பி வைத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் அங்கு வந்து பொது மக்கள் மற்றும் கட்சியினர் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
மேலும் வாகனத்தில் கொண்டு வந்தவர்கள் கூறுகையில் பலர் வேலை செய்வதாகவும் , கோவில் முன்பு அமர்ந்து இருந்தவர்கள், பேபபர் படித்து கொண்டு இருந்த சிலரை சிலர் வழுக்கட்டாயமாக வாகனத்தில் இழுத்து கொண்டு வந்ததாகவும், இங்கு வந்தவுடன் கையில் இருந்த பொருட்கள் பணம் செல்போன் போன்றவை பறித்து கொண்டு தீவைத்து எரித்து அனைவருக்கும் மொட்டை அடித்து உள்ளனர். சொல் பேச்சு கோட்காமல். சத்தம் போட்ட சிலரை பைப்பு, குச்சி கொண்டு கண்மூடி தனமாக தாக்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் தாசில்தார்கள் காந்திமதி வாகனத்தில் கடத்தி வரப்பட்டவர்களிடம் பெயர் விலாசம் வாங்கி கொண்டு போலீசார் உதவியுடன் வாகனத்தில் அவர்களை காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். புகார் பெறாமல் , பணம் , பொருட்களை பிரித்தது தொடர்பாகவும் கண்மூடி தனமாக தாக்கியது தொடர்பாக சரியான புகார் பெறாமல் அனுப்பி வைப்பதை கண்டித்து வாகனத்தை மறித்தனர். அதையும் மீறி இரண்டு வாகனங்களில் சுமார் 70 பேரை போலீசார் அனுப்பி வைத்தனர். அதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆள் கடத்தல் போல் ஆட்களை கடத்தி அவர்களது உடமை பரித்தும் , கொடுமையாக தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அப்பொழுது தான் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று பொதுமக்கள் அங்கேயே உள்ளனர்.
Leave a Reply