செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார்

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்று மாவட்ட ஆட்சியர் பலூன் பறக்க விட்டார்

கோவை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாளை கோவை மாவட்டத்திற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட உள்ளது.

கொடிசியா வளாகத்தில் அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினர்களிடம் அமைச்சர்கள் ஒப்படைக்க உள்ளனர். இந்நிலையில் அந்த ஜோதியை வரவேற்கும் விதமாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் வெல்கம் டூ கோயம்புத்தூர் என்ற ஹீலியம் பலூனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பறக்க விட்டார்.

இந்நிகழ்வில் பல்வேறு குழந்தைகள், இளைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர் அவர்களுடன் சேர்ந்து கருப்பு வெள்ளை நிறத்திலான பலூன்களை பறக்க விட்டார். இந்நிகழ்வில் பல்வேறு குழந்தைகள், இளைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர் அவர்களுடன் சேர்ந்து கருப்பு வெள்ளை நிறத்திலான பலூன்களை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பொது மக்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது