வாக்கிங் போன கேப்பில் வீடு புகுந்து பணம் அபேஸ் செய்த மர்ம ஆசாமி ..!

கோவை காட்டூர், காளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 59 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் வீட்டை பூட்டாமல் வெளியே வாக்கிங் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன், பீரோவில் இருந்த பணம் ரூ.8,500 ஆகியவற்றை காணவில்லை. யாரோ’ திறந்து கிடந்த வீட்டில் புகுந்து திருடி சென்று விட்டனர்.அவரது வீட்டில் பொறுத்தியிருந்த சி.சி.டி.வி, கேமராவில் ஆய்வு செய்தபோது ஒரு ஆசாமி பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது .இது குறித்து பாலசுப்பிரமணியன் காட்டூர்போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு செய்து அந்த சாமியை தேடி வருகிறார்கள்.