கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறையில் பணம், லேப்டாப் கொள்ளை..!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கபிலன் ( வயது 21) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அறையின் கதவை திறந்து போட்டு தூங்கிவிட்டனர். அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 2லேப்டாப் ,பணம் ரூ 38 ஆயிரம் ஆகியவற்றை திருடிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து மாணவர் கபிலன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.