பிரபல மருத்துவமனையில் ஆபரேஷன்க்கு சென்ற நோயாளியின் 8 பவுன் தாலி செயின் திருட்டு..!

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், பி. ஆர் .கே. நகரை சேர்ந்தவர் பால் ஜார்ஜ் (வயது 62 )வியாபாரி. இவரது மனைவி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்தனர் .அந்த நகைகளை அவர் தங்கி இருந்த அறையில் பீரோவில் வைத்திருந்தார். ஆபரேஷன் முடிந்து அறைக்கு திரும்பியதும் அலமாரியை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த 7 பவுன் தாலி செயின், 4 கிராம் கம்மல் ஆகியவற்றை காணவில்லை . யாரோ திருடி விட்டனர். இது குறித்து பால் ஜார்ஜ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . பிரபல மருத்துவமனையில் நோயாளியின் நகைகள் திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.