ரயில் மறியல்.ஓய்வூதிகள்கள் 130 பேர் கைது…

கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் ( இ.பி.எஸ் 95) சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதன்படி நேற்று ஏராளமான ஓய்வூதியர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு குவிந்தனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:- ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனாவிற்கு முன்பு வழங்கப்பட்டது போல மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்ய கட்டண சலுகை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார். பின்னர்ரயில் மறியலுக்கு முயன்றஓய்வூதியர்கள் 130 பேரை போலீசார் கைது செய்தனர் .