திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகே தண்ணீர் உள்வாங்கும் கிணறு ஒன்றில் ஐஐடி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அந்த ஆராய்ச்சியில் கிணற்றுக்குள்ளே சுண்ணாம்பிலான பாதாளக் குகைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சென்ற வருடம் பருவ மழை பெய்த போது அதிக அளவில் தண்ணீர் சென்றும் கூட அந்த கிணறு நிரம்பவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த கிணற்றின் மீது ஐஐடியை சேர்ந்தவர்கள் மூன்று மாதங்களாக கடுமையான ஆராய்ச்சி செய்து வந்தனர். அதில், இந்த கிணற்றுக்கு அடியிலிருக்கும் சுண்ணாம்பு பாறைகள் கரைந்து ஓட்டையாகி பூமிக்கு அடியில் ஒரு நீரோடை போல ஓடிவருவதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிணற்றின் வழியே துளைகளை ஏற்படுத்தி உபரி நீரை அதில் செலுத்தினால் மற்ற கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதுடன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.