டாஸ்மாக் பாரில் நள்ளிரவில் மது விற்பனை: 4 பேர் கைது – 228 பாட்டில் பறிமுதல்..!

கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்றுநள்ளிரவில் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ( என் 16 96)திடீர் சோதனை நடத்தினார்கள்அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 228 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக திருவண்ணாமலை கவுதம் ( 36 ) பூ மார்க்கெட் ராதாகிருஷ்ணன் ( 43 ) தேவகோட்டை செந்தில் குமார் (43) சிவகங்கை மாவட்டம் தமிழரசன் ( 32 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.