போதை மாத்திரைகள் வைத்திருந்த பி.பி.ஏ. பட்டதாரி கைது..!

கோவை ஆர். எஸ். புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொன்னையராஜபுரம், கோவிந்தசாமி லேஅவுட்டை சேர்ந்த குணசேகரன் மகன் ராம் பிரசாத் (வயது 26) என்பது தெரிய வந்தது. இவர் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.இவர் மீது 4 வழக்குகள் உள்ளது.