மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் சக்தி கோ.ப.செந்தில்குமார் தலைமையில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞரணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் தமிழகம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் மருவூர் முருகன் திருக்கோயில் நேற்று மதுராந்தகத்தை சேர்ந்த மோகன், எலப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தேவராஜ், ஆகிய இரு மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் இயக்கக் கூடிய அதிநவீன இருசக்கர வாகனம் வழங்கினார். அதைப் பெற்று சென்ற மாற்றுத்திறனாளிகள் ஆன்மீக இளைஞரணி தலைவருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். மேலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை எளியவர்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply