இந்தோனேசியாவில் ஒரு முதலை சுமார் ஆறு வருடங்களாக கழுத்தில் மாட்டிக்கொண்ட டயருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறது.
இந்தோனேசியாவில் இருக்கும் பலூ நகரின் ஆற்றில் கிடந்த முதலையின் கழுத்தில் இருசக்கர வாகனத்தின் டயர் மாட்டிக்கொண்டது. சுமார் ஆறு வருடங்களாக அந்த டயரை முதலையின் கழுத்திலிருந்து நீக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில் முதலையின் கழுத்திலிருந்து டயரை நீக்குபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று அந்நகரத்தின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் டிலி என்ற நபர், மூன்று வாரங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு ஒரு வழியாக அந்த முதலையின் கழுத்திலிருந்து டயரை நீக்கி விட்டார்.
Leave a Reply