மன்னுளி பாம்பு , போலி புலித்தோல் வைத்திருந்த நாட்டு வைத்தியர் கைது..!

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலையை ஒட்டி உள்ள கோவில் மேடு பகுதியில் கோவை வனச்சரக பணியாளர்களுக்கு புலித்தோல், மண்ணுளி பாம்பு ஒருவர் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டு வைத்திய சின்னத்தம்பி ராஜ் (வயது 52) என்பவரது வீட்டில் நேற்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வைத்திருந்த புலி தோல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது நாட்டு வைத்திய கடையில் வைத்திருந்த மண்ணுளிப் பாம்புகள் உயிருடன் இரண்டு பாம்புகளும் இறந்த நிலையில் ஒரு பாம்பு, ஒரு மான் கொம்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது . இது தொடர்பாக சின்ன தம்பி ராஜ் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது இந்த மண்ணுளி பாம்புகளை புற்றுநோய் மருந்து தயாரிக்க வைத்துள்ளதாக கூறினார்.