மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு – இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்பு..!

ங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும் தெரியவந்து விசாரணை வேகமெடுத்த நிலையில், இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..