பாம்புகளை கண்டுபிடிக்கும் மேஜிக் குச்சி..!!

ந்திய விவசாயிகளின் நீண்ட காலப் பயத்திற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக, “கிசான் மித்ரா” என்ற மின்னணு கருவியை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தியுள்ளார்..

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடந்த வேளாண் திருவிழாவில் அறிமுகமான இந்த கருவி, பார்ப்பதற்குச் சாதாரண நடைப்பயிற்சி குச்சி போல இருந்தாலும், 100 மீட்டர் சுற்றளவில் மறைந்திருக்கும் விஷப் பாம்புகளைக் கண்டறியும் திறன் கொண்டது. விவசாயிகள் வயலில் தண்ணீர் பாய்ச்சச் செல்லும்போதோ அல்லது இரவு நேரங்களில் நடமாடும்போதோ, இந்த குச்சியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும்; அருகில் பாம்பு இருந்தால் இது அதிர்வுகளை ஏற்படுத்தி விவசாயிகளை எச்சரிக்கும்.​இந்தியாவில் சுமார் 350 வகையான பாம்புகள் இருந்தாலும், அதில் 10% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. இருப்பினும், முறையான சிகிச்சை கிடைக்காததால் ஆண்டுதோறும் பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்க்கவே இந்த மின்னணு குச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும் இந்த குச்சி, நிலத்தடியில் அல்லது புதர்களுக்குள் மறைந்திருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவதால், இனி பாம்புக் கடி மரணங்களை பெருமளவு குறைக்க முடியும் என வேளாண் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.